ஆப்நகரம்

மீண்டும் தொல்லை பண்ணும் பாகிஸ்தான்; பஞ்சாபில் ட்ரோன்களை பறக்கவிட்டு அட்டூழியம்!

பாகிஸ்தானிற்கு சொந்தமான ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் மீண்டும் பறந்ததால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Oct 2019, 10:13 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil Drones


இதையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீருக்குள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இம்ரான் கான் சீன அதிபர் கிட்ட என்னதான் பேசினார்..!

நமது எல்லைக்குள் ஊடுருவும் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த மாதம் பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன்கள் பறந்துள்ளன.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். இரு ட்ரோன்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

‘காஷ்மீர் விவகாரத்தப் பற்றிலாம் சீனா பேசக் கூடாது ’: இந்தியா!

இதையடுத்து மீண்டும் பஞ்சாபின் ஹுசைனிவாலா பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் பறந்துள்ளன. இதனைக் கண்ட கிராம மக்கள் அவற்றை படம்பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் காரணமாக பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால் பஞ்சாப் மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல... ஜம்மு -காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலில் ஜகா வாங்கும் காங்கிரஸ் !!

அடுத்த செய்தி