ஆப்நகரம்

இது தானா வளர்ச்சி?; பாஜகவுக்கு செக் வைக்கும் இளைஞர்கள்

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜகவுக்கு எதிராக மீம்ஸகளை வெளியிட்டு சமூகவலைதளங்களில் இளைஞர்களின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

TNN 20 Sep 2017, 6:23 pm
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பாஜகவுக்கு எதிராக மீம்ஸகளை வெளியிட்டு சமூகவலைதளங்களில் இளைஞர்களின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
Samayam Tamil viral memes against bjp in gujarat
இது தானா வளர்ச்சி?; பாஜகவுக்கு செக் வைக்கும் இளைஞர்கள்


குஜராத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி பிடித்தது. தொடர்ந்து வந்த எல்லா தேர்தல்களையும் இதே பிரசாரத்தை மேற்கொண்டு இந்தியாவில் பாஜகவின் வெற்றி உச்சத்திற்கு சென்றது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் தேர்தல் வரும் வேளையில், அங்குள்ள குறைகளை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு இளைஞர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

குஜராத்தின் வெறித்தனமான வளர்ச்சி என்ற வாசகத்தில் தான் பாஜக இந்தியாவில் பலம் வாய்ந்தது. தற்போது அதே பெயரில், ஹேஷ் டேக் துவங்கப்பட்டு, அங்குள்ள கரடு முரடான சாலைகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி பாதிப்பு, விவசாய அழிவு என்று போட்டோக்களையும் மீம்ஸ்களையும் வெளியிடப்பட்டு, இது தான் வெறித்தனமான வளர்ச்சி என்று பாஜகவை கலாய்த்து வருகின்றனர்.

டிஜிட்டல் இந்தியா மூலம் இந்தியாவை கைக்குள் போட பாஜக நினைக்கும் அதே வேளையில், நவீன தொழில்நுட்பத்தில் அக்கட்சிக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் உச்சக்கட்டம் என்னவென்றால், பாஜகவில் உள்ளவர்களும் இதை ஆமோதிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து பாஜ தலைவர் அமித்ஷா கூறுகையில், பாரதீய ஜனாதவின் வளர்ச்சியை பிடிக்காமல் சில பேர் தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அதற்கு இளைஞர்கள் இரையாகி விட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி