ஆப்நகரம்

இதெல்லாம் தேச விரோதமா? ஆபாச படம் பார்ப்பது குறித்து அமைச்சர் சர்ச்சை பேச்சு!

சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 6 Sep 2019, 12:53 pm
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிருப்தியாளர்களை சமாளிக்கும் வகையில், கோவிந்த கார்ஜோல், அஸ்வத் நாராயணன், லட்சுமண் சவடி ஆகியோருக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Madhuswamy


இதில் லட்சுமண் சவடி கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி, கர்நாடக சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

74 வயதில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த மூதாட்டி மங்கம்மா!

அப்போது லட்சுமண் தனது செல்போனில் ஆபாச பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை அருகில் இருந்த அமைச்சர் சிசி பாட்டீலும் எட்டிப் பார்த்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக லட்சுமண், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் கர்நாடகாவில் மீண்டும் அமைந்துள்ள பாஜக ஆட்சியில் லட்சுமணுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிறையில் சிதம்பரம் சாப்பிட்ட காலை உணவு!!

இதனை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசாமி, சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல.

ஆனால் அது தவறான விஷயம் தான். எதிர்பாராதவிதமாக செல்போனில் ஆபாச படம் பார்த்துவிட்டார். அதற்காக அவருக்கு அமைச்சர் பதவி வேண்டாம், துணை முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது சரியல்ல.

ஹெல்மெட்டை இப்படி மறந்துட்டீங்களே- வசமாக சிக்கிய அமைச்சருக்கு இவ்வளவு தான் அபராதம்!

இதுபோன்ற தவறுகள் நாம் எல்லோரும் செய்வது தான். யாரையும் ஏமாற்றவில்லை. தேசத்திற்கு விரோதமாக செயல்படவில்லை என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி