ஆப்நகரம்

புகைப்படம் கிடைச்சிடுச்சி; விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி - இஸ்ரோ!

விக்ரம் லேண்டர் உடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Sep 2019, 2:21 pm
நிலவின் தென் துருவத்தை முதல் முறையாக களமிறங்கியுள்ளது இஸ்ரோ. இதற்காக அனுப்பப்பட்ட ’சந்திரயான் 2’ விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்கும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
Samayam Tamil Vikram Lander


அதன்படி, படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு, விக்ரம் லேண்டர் இயக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் தொடர்பு தரைக் கட்டுப்பாட்டு மையத்துடன் துண்டிக்கப்பட்டது.

சந்திரயான் - 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். லேண்டர் இருக்கும் இடம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், அதனுடன் தகவல் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

லேண்டரின் எதிர்பாராத செயல்பாட்டால் கண்கலங்கிய சிவனை, பிரதமர் மோடி கட்டி அணைத்து தேற்றினார். இந்நிலையில் நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தாலும் கைகொடுத்த ஆர்பிட்டர்!

இதுகுறித்து பேசிய தலைவர் சிவன், நிலவில் தரையறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டர் முழுமையாக உள்ளது.

இதன் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும். அதனுடன் தகவல் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி பெருக்கில், உற்சாகமாக வேலையைத் தொடர்ந்து வருகின்றனர்.

சந்திரயான் -2 லேண்டருக்கு விக்ரம் என ஏன் பெயர் வந்தது தெரியுமா?

அடுத்த செய்தி