ஆப்நகரம்

'முத்தலாக் விவகாரத்தில் முஸ்லீம் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்': மோடி..!

முத்தலாக் விவகாரத்தில் முஸ்லீம் பெண்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 16 Apr 2017, 8:10 pm
முத்தலாக் விவகாரத்தில் முஸ்லீம் பெண்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil we should make efforts to provide justice to muslim women pm modi on triple talaq issue
'முத்தலாக் விவகாரத்தில் முஸ்லீம் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்': மோடி..!


ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்ற பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். “நமது முஸ்லீம் சகோதரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது. யாரும் இதனால் பாதிக்கப்படக் கூடாது. இந்த விவகாரத்தில் முஸ்லீம் சமுதாயத்தினரிடையே, கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது.

ஒருவேளை தீய சக்திகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரச்சனைகளை ஏற்படுத்த முயன்றால், நாம் சமுதாயத்தை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க போராட வேண்டும். ” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தகுந்த காரணம் இல்லாமல் தங்கள் மனைவிகளுக்கு முத்தலாக் கொடுப்பவர்களை அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் எச்சரித்துள்ளது. “ தகுந்த காரணமில்லாமல் முத்தலாக் கொடுப்பவர்களை, சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைப்பது என உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.” என அந்த அமைப்பின் உறுப்பினர் மவுலானா காலித் ஆர்.பிராங்கி தெரிவித்துள்ளார்.

We should make efforts to provide justice to Muslim women: PM Modi on triple talaq issue

அடுத்த செய்தி