ஆப்நகரம்

காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க விடமாட்டோம் – கா்நாடகா அமைச்சா்

காவிாி மேலாண்மை வாாியம் அமைத்தால் அது கா்நாடகாவின் நலனுக்கு எதிராக அமையும் என்பதால் காவிாி மேலாண்மை வாியம் அமைக்க முயற்சித்தால் கா்நாடகா அரசு அதை எதிா்க்கும் என்று அம்மாநில நீா்வளத்துறை அமைச்சா் எம்.பி.பட்டீல் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 21 Sep 2017, 2:27 am
காவிாி மேலாண்மை வாாியம் அமைத்தால் அது கா்நாடகாவின் நலனுக்கு எதிராக அமையும் என்பதால் காவிாி மேலாண்மை வாியம் அமைக்க முயற்சித்தால் கா்நாடகா அரசு அதை எதிா்க்கும் என்று அம்மாநில நீா்வளத்துறை அமைச்சா் எம்.பி.பட்டீல் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil we will not set up the kaveri management board
காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க விடமாட்டோம் – கா்நாடகா அமைச்சா்

மத்திய அரசிதழில் வெளியிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏன் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இது குறித்து பேசிய கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சா் எம்.பி.பட்டீல்,“ காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது என்றும், மத்திய அரசு அந்த வாரியத்தை அமைக்க முயன்றால் கர்நாடகா அரசு கடுமையாக எதிர்க்கும்” என்றும் கூறினார்.

மேலும், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்றும், அதுபோன்ற வாரியத்தை அமைக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்றும், அப்படி அமைப்பதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தால் அது அதிகார மீறலாக இருக்கும்’’ என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அம்மாநில முதலமைச்சா் சித்தராமையா நேற்று மைசூரு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள யோசனையின்படி காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்படுவதை கர்நாடகா அரசு எதிர்க்கும் என்று கூறியிருந்தார்.

அடுத்த செய்தி