ஆப்நகரம்

வரதட்சணை வாங்குவதில் ஏழை, பணக்காரர் பேதம் இல்லை: நீதிமன்றம்

வரதட்சணைக் கொடுமைக்கு ஏழை, பணக்காரன் என எல்லா தரப்பினரும் இரையாகிவிட்டனர் என்று டெல்லி நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 12:08 am
வரதட்சணைக் கொடுமைக்கு ஏழை, பணக்காரன் என எல்லா தரப்பினரும் இரையாகிவிட்டனர் என்று டெல்லி நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Samayam Tamil dowry-759


டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி சுனேனா ஷர்மா, “இந்த சமூகத்தில் பணம் படைத்தவர்களும் பேராசைக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். எல்லா தரப்பினரும் வரதட்சணை கொடுமைக்கு இரையாகியுள்ளனர்” என்று வேதனை தெரிவித்தார்.

வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே 2005ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக விலை உயர்ந்த கார், தங்க நகைகள், ரூ.2.5 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

திருமணமான சில நாட்களிலேயே மேலும் வரதட்சணை கேட்டு பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால், அந்தப் பெண் 2007ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடுத்த செய்தி