ஆப்நகரம்

ஒரு வருஷத்துக்கு ரேஷன் பொருள்கள் இலவசம்: பிரதமருக்கு போட்டியாக முதல்வர் அறிவிப்பு !!

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஒரு வருடத்துக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2020, 5:59 pm
பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜூன் 30) மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில் முக்கிய அம்சமாக, ஏழை, எளிய மக்களுக்கு மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil cm bengal


இதன்படி, நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் நவம்பர் மாதம் வரை, மாதந்தோறும் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, ஒரு கிலோ கடலைப் பருப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தமது உரையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிரடி நடவடிக்கைகளுக்கு எப்போதும் பெயர்போன மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள்: மோடி அதிரடி அறிவிப்பு!!

அதாவது, மேற்கு வங்க மாநிலத்தில் ஏழை, எளியோருக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் இலவச ரேஷன் பொருள்கள், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை தொடர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்கள் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், அவரின் இந்த அறிவிப்புக்கு போட்டியாக மம்தா பானர்ஜி இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி