ஆப்நகரம்

அடுத்து 5 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

பராமரிப்பு பணிகள் காரணமாக தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படவுள்ளதாக பெஸ்காம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Jan 2021, 12:42 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் BESCOM எனப்படும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் மூலம் மின் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இது பெங்களூரு நகர்ப்பகுதிகள், கோலார், தும்குரு, ராமநகரா, சிக்கபல்லபுரா, சித்ரதுர்கா, தாவனகரே ஆகிய மாவட்டங்களுக்கு மின் விநியோகம் செய்து கொண்டிருக்கிறது. பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின் சேவை துண்டிக்கப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக பெங்களூரு மாநகர பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Samayam Tamil Bangalore Power Cut


நேற்றைய தினம் பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் சேவை கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மின் சேவை துண்டிக்கப்படுவதாக பெஸ்காம் தெரிவித்துள்ளது.

இனி கொரோனாவுக்கும் பீஸ் கட்டணும்; புது ரூட் போடும் தனியார் பள்ளிகள்!
அதன்படி, கோனன்குண்டே, புத்தனஹள்ளி ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 18) முதல் வரும் வெள்ளி (ஜனவரி 22) வரை மின்சாரம் துண்டிக்கப்படும். காலை 10 மணி முதல் 5.30 மணி வரை மின்சாரம் வழங்கப்படாது. இதற்கேற்ப பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் சுஞ்சகட்ட மெயின் ரோடு, விநாயகா தியேட்டர் ரோடு, கப் பேக்டரி, கிளாஸ் பேக்டரி ரோடு, கிருஷ்ணா லேஅவுட், கோத்னூர் மெயின் ரோடு, சதானந்தப்பா காம்பவுண்ட், சாரதா நகர், சிவசக்தி நகர், டி.ஆர்.ஆர் மருத்துவமனை ஆகிய பகுதிகளிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு மின்சேவை துண்டிக்கப்படுகிறது.

ஒரு வட்டத்தில் இருந்து இன்னொரு வட்டத்தில் சிக்கிய விஜய்
கடந்த வாரம் ஜனவரி 11 முதல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது, மேற்புறம் சென்று கொண்டிருந்த 11 கிலோவாட் மின் இணைப்பை பூமிக்கு அடியில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்களாக மாற்றும் பணி அரங்கேறியது.

அடுத்த செய்தி