ஆப்நகரம்

மத்திய ஆப்பிரிக்காவில் பிரதமர் மோடி; ருவாண்டா பயணத்தின் சிறப்புகள் என்ன!

பிரதமர் மோடியின் ருவாண்டா பயணத்தில் நிறைந்திருக்கும் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 23 Jul 2018, 1:31 pm
புதுடெல்லி: பிரதமர் மோடியின் ருவாண்டா பயணத்தில் நிறைந்திருக்கும் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
Samayam Tamil PM Modi


பிரதமர் மோடி மத்திய ஆப்பிரிக்காவின் 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். முதலில் ருவாண்டா நாட்டிற்கு செல்கிறார். டெல்லியை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட சிறிய நாட்டிற்கு, இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும்.

* பெண்களுக்கு அதிகாரம்

ருவாண்டா நாட்டின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே இவ்வளவு விகாதாச்சாரத்தில் பெண் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் இதுவே ஆகும். ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்கான மசோதாவை நிறைவேற்ற போராடி வருகிறது. அவ்வாறு நிறைவேறும் பட்சத்தில், மக்களவை, மாநில சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பெண்கள் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* புனித மாடுகள்

மோடியின் இந்தப் பயணம் வெறும் அடையாளத்திற்காக மட்டுமல்ல. அந்நாட்டின் கிழக்கு மாகாணமானத்தில் உள்ள ருவெரு மாதிரி கிராமத்தில், ‘கிரின்கா’ திட்டத்தின் ஒருபகுதியாக 200 பசு மாடுகளை பரிசாக அளிக்கிறார். அதாவது ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ஒரு மாடு என்பதாகும்.

* தலைநகரம் கட்டமைப்பு

ருவாண்டாவின் தலைநகரான கிகாளி, இந்திய மெட்ரோவிற்கு குறிப்பாக புதுடெல்லி அறிவுரை ஒன்றை வழங்குகிறது. அதாவது பொதுப் போக்குவரத்தில் தூய்மையை, நேரம் தவறாமையை எப்படி கடைபிடிப்பது என்பதாகும். உள்நாட்டுப் போர், இன அழிப்பு போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, கடந்த 1994ல் தான் தலைநகரம் கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* சீனாவுடன் சந்திப்பு

இந்தப் பயணத்தில் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார். அவர் நேற்று ருவாண்டா வந்து சேர்ந்தார். இதுவே சீன அதிபருக்கும் முதல் ருவாண்டா பயணமாகும். ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக இருக்கும் ருவாண்டா அதிபர் பால் ககாமே, இரு ஆசியத் தலைவர்களுடன் இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.

ருவாண்டா பயணத்தைத் தொடர்ந்து, உகாண்டா, பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

What makes this landlocked Central African country Rwanda so special for PM Modi.

அடுத்த செய்தி