ஆப்நகரம்

சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளுக்கான தேதி வெளியாக உள்ளது.

Samayam Tamil 31 Dec 2020, 6:47 am
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் என்பது மாநில பாடத்திட்ட தேர்வுகளுக்கு முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது.
Samayam Tamil cbse


கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் பிற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன.

பள்ளிகள் திறக்கப்படாத தமிழகத்திலேயே பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதேசமயம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த ஷாக்: நிர்மலா முதல்வர் வேட்பாளரா?

மாநில பாடத் திட்ட தேர்வுகளுக்கு முன்னதாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம் என்ற நிலையில் தேர்வுக்கான தேதியை மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடையே மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமே‌‌ஷ் பொக்ரியால் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார்.

பொதுத் தேர்வும், பள்ளிகள் திறப்பும்: அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!
இந்தநிலையில், தேர்வு தொடங்கும் தேதிகள் இன்று (டிசம்பர் 31) மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி