ஆப்நகரம்

இன்னும் 2 நாள்தான்: விவசாயிகளுக்கு ரூ.2,000 வழங்கும் அரசு-எப்படி பெற வேண்டும்?

விவசாயிகளுக்கு ரூ.2000 இம்மாதம் 25ம்தேதி அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

Samayam Tamil 23 Dec 2020, 11:39 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 இம்மாதம் 25ஆம்தேதி செலுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்லாருக்கும் 10000 ரூபாய், இலவச ஸ்மார்ட்போன்: அரசு அதிரடி அறிவிப்பு!

டிசம்பர் 25ஆம் தேதியன்று விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் பலனடைவர். மொத்தம் ரூ.18 ஆயிரம் கோடி செலுத்தப்படும். ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இத்திட்டத்தின் முதல் இரண்டு தவணைகள் வழங்கப்பட்டன. பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித்திட்டத்தின் மூன்றாவது மற்றும் கடைசித் தவணை இது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த திட்டத்திற்காக கடந்த 22ஆம் தேதி (நேற்று) வரை 2 கோடி விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பி.எம். கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி