ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: இதெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே - மாநில அரசு தீவிரம்!

மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, பள்ளிகளைத் திறக்க போதிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.

Samayam Tamil 20 Sep 2020, 6:10 am
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போனது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி வரும் 21ஆம் தேதி முதல் மாணவர்களை அனுமதிக்க பள்ளிகள் தயாராகி வருகின்றன. அதாவது 9 - 12 வகுப்பு மாணவர்கள் மட்டும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil when will schools and colleges reopen in karnataka and procedures to follow
பள்ளிகள் திறப்பு: இதெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே - மாநில அரசு தீவிரம்!


மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

வழக்கமான வகுப்புகள் தொடங்கப்படாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் போதிய சரீர இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். தங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அனைவரும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் தீவிர ஏற்பாடு

ஏதாவது பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் உடனே பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் திறந்த வெளிகளில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும். பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பள்ளி நுழைவு வாயிலில் கைகளைச் சுத்தப்படுத்த கிருமிநாசினி, உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கருவி உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


பள்ளிக்கூடம் திறக்க மாட்டாங்க போல... விற்பனைக்கு ரெடியாகும் 1000+ பள்ளிகள்

ரெடியான கர்நாடக அரசு

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை பள்ளிகள், ப்ரீ-யூனிவர்சிட்டி கல்லூரிகள் ஆகியவை வரும் 21ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில கல்வியமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 21ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்.

வழக்கமான வகுப்புகள் இல்லை

அதேசமயம் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் அனுமதி பெற்று வர வேண்டும். பள்ளிகளில் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இது வழக்கமான வகுப்புகளாக இருக்காது. மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு பிறகே வழக்கமான வகுப்புகள் நடத்தப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும். ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் 10 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்திருப்பர்.

கல்லூரிகள் திறப்பு எப்போது?

ஆனால் நடப்பாண்டில் அவ்வாறு இல்லை. இதற்கான இலக்கு நிர்ணயித்து வரும் 30ஆம் தேதிக்குள் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டிகிரி கல்லூரிகளைத் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


கொரோனா 2ஆம் அலை வரப்போகுது: பீதியை கிளப்பும் எச்சரிக்கை!

உஷாராக இருங்க மாணவர்களே

இந்த சூழலில் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக துணை முதலமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான சி.என்.அஸ்வத் நாராயண் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மேற்குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உணர்ந்து மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இதையொட்டி அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்த செய்தி