ஆப்நகரம்

9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

10, 12ஆம் வகுப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2021, 9:21 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைச் சுற்றியே 2020ஆம் ஆண்டு கழிந்தது. இந்த சூழலில் புதிய நம்பிக்கையுடன் 2021ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே கல்வி நிலையங்கள் திறப்பில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
Samayam Tamil when will schools reopen for 9 and 11 class students in karnataka
9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


கல்வித்துறை ஆலோசனைக் கூட்டம்

இதன் தொடர்ச்சியாக 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து திட்டமிடப்பட்டது. அதன்படி, வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் முழு நேரமும் பள்ளிகள் இயங்கும் என்று கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாநில பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தொழில்நுட்ப ஆலோசனைக் கமிட்டி ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர்.

பள்ளிகள் திறப்பு தேதி

அதில் பிப்ரவரி ஒன்று முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் பேசிய மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது பற்றி வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொழில்நுட்ப கமிட்டியினர் கூடி ஆலோசனை நடத்துவர். அதில் உரிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்றார்.


உங்க அக்கவுண்டுக்கு ரூ.4000 வருமா? மத்திய அரசின் திடீர் அறிவிப்பு!

அரசுக்கு தொடர் கோரிக்கை

மேலும் பேசுகையில், பள்ளிகள் முழு நேரமும் இயங்கினால் தான் பாடத்திட்டத்தை ஆசிரியர்களால் முடிக்க முடியும். 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வித்யகாமா மற்றும் பிற வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே எங்களது ஆலோசனைக் கூட்டத்தில் 8ஆம் வகுப்பிற்கும் பள்ளிகளைத் திறப்பது பற்றி ஆலோசனை செய்தோம்.

ஆன்லைன் & ஆஃப்லைன் வகுப்புகள்

எங்களது முடிவு எத்தகைய பலன்களை அளிக்கும் என்று தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கட்டாயமில்லை. மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளில் எதைத் தொடர்வதற்கும் அனுமதி அளிக்க வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 400 முதல் 500 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கல்விக் கட்டண சர்ச்சை

சில மாவட்டங்களில் ஓரிலக்கத்தில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இவ்வாறு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசின் சிறப்பான பங்களிப்பே காரணம். தொழில்நுட்பக் குழுவினரின் ஆலோசனைப் படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறினார். கல்விக் கட்டணம் சர்ச்சை குறித்து கேள்விக்கு பதிலளிக்கையில், பெற்றோர்களின் நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.


மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு?

பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிரச்சினை

அதேசமயம் பல்வேறு தனியார் பள்ளிகளில் சம்பளமின்றி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். பலர் தங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருபுறம் பெற்றோர்களின் நலனையும், மறுபுறம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதற்காக முதல்வர் எடியூரப்பா உடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி