ஆப்நகரம்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு: மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும்? எப்போது ரிசல்ட்?

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும், மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 2 May 2021, 6:32 am
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, வரையறுக்கும் முறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil cbse exam result


சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்பு!
அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படும் என்ற கேள்வி வலம் வந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,

யூனிட் தேர்வின் அடிப்படையில் 10 மதிப்பெண்கள்,

மிட் டர்ம் தேர்வு அடிப்படையில், 30 மதிப்பெண்கள்,

ப்ரீ போர்ட் தேர்வு அடிப்படையில், 40 மதிப்பெண்கள்

இன்டர்னல் அசஸ்மன்ட் அடிப்படையில், 20 மதிப்பெண்கள்
இந்த மாவட்டங்களில் விரைவில் முழு ஊரடங்கு; தீவிரம் காட்டும் மாநில அரசு!
என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி