ஆப்நகரம்

பண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்!

கொரோனா வைரஸ் வரும் நாட்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 29 Oct 2020, 4:53 pm
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பயம் நீடித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக மிகவும் தீவிரமாக பரவி வந்த வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக ஓரளவு குறைந்துள்ளது. அதற்காக சுகாதார கட்டுப்பாடுகளில் அலட்சியம் காட்டி விடக் கூடாது. ஏனெனில் அடுத்து வரும் நாட்கள் மிகவும் சிக்கலானவை. தொடர்ச்சியாக பண்டிகை நாட்கள் வருவது தான் இதற்கு காரணம்.
Samayam Tamil which are the states possible to increase covid 19 cases in festival season
பண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்!


கொரோனா அலட்சியம் கூடாது

அக்டோபர் மாதம் நவராத்திரியில் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கல் வரை நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டிருக்கும். பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கு வழிவகுக்கும். பொதுமக்கள் வெளியில் அதிகளவில் செல்வர். பொது இடங்களில் ஏராளமானோர் கூடுவர். வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வெள்ளமாய் காணப்படும். இந்த சூழலில் கொரோனாவை மறந்து வழக்கம் போல் வெளியில் சுற்றினால் அவ்வளவு தான். கோவிட்-19 தொற்று எளிதில் தொற்றிக் கொள்ளும்.

பண்டிகை நாட்களில் ஆபத்து

அதுவும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு நிலைமை இன்னும் மோசம். உடல் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தி விடும். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டம். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


கொரோனா தடுப்பூசி முதலில் இவங்களுக்குத்தான்: பிரதமர் மோடி பேட்டி பாகம்-4

சுகாதாரத்துறை அமைச்சகத் தகவல்

உஷாரா இருக்க வேண்டிய மாநிலங்கள்

முகக்கவசங்கள் அணிந்து, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். வெளியிடங்களில் போதிய சரீர இடைவெளி விட்டு செல்ல வேண்டும். பண்டிகை நாட்களில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாட்டின் மொத்த பாதிப்பில் பாதியளவு மேற்கூறிய மாநிலங்களில் தான் பதிவாகி வருகின்றன. இந்த மாநிலங்களுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில் இருக்கிறோம்.

மத்திய குழு ஆய்வு

போதிய உதவிகளைச் செய்து தருகின்றோம். உரிய வழிகாட்டுதல்களை பிறப்பித்து வருகின்றோம். இதற்காக மத்திய அரசின் மருத்துவக் குழு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது. இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தைப் பொறுத்தவரை தற்போது 1,29,746 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி எப்போ வரும்? அதிகாரப்பூர்வ தகவல்!

இன்றைய கொரோனா நிலவரம்

மாநில வாரியாக பாதிப்பு

கர்நாடகாவில் 8,12,784 பேரும், டெல்லியில் 3,70,014 பேரும், கேரளாவில் 4,11,465 பேரும், மேற்கு வங்கத்தில் 3,61,703 பேரும் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தினசரி 11 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் சராசரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய பாதிப்புகள் கேரளா(8,000) மற்றும் மகாராஷ்டிராவில்(6,000) தான் அதிகமாக பதிவாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் மூன்றாவது கோவிட்-19 அலை உருவாகியிருப்பதாக தோன்றுகிறது. நேற்றைய தினம் புதிய உச்சமாக 5,673 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி