ஆப்நகரம்

புல்வாமா தாக்குதல்: 13,500 பக்க குற்றப்பத்திரிகை சொல்வது என்ன?

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 18 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Aug 2020, 8:12 am
இந்திய புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 13,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil pulwama attack


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயம், தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

இந்த வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் (IED) நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சுமார் 40 பேர் பலியாயினர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அமைப்பு இதுவரை 5க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது.

மகிழ்ச்சியூட்டும் UNLOCK 4.0 அறிவிப்பு; அடுத்தக்கட்ட தளர்வுகள் என்னென்ன?

இதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 18 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



குற்றப்பத்திரிகை என்பது, என்ன நடந்தது என்பதை விசாரணை ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு மிகச்சரியாக விளக்கும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.

அடுத்த செய்தி