ஆப்நகரம்

ஒமைக்ரான் இன்னும் டேஞ்சராத்தான் இருக்கு.. உலக சுகாதார அமைப்பு வார்னிங்!

ஒமைக்ரான் வைரஸ் இன்னும் ஆபத்தானதாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Samayam Tamil 28 Jan 2022, 11:20 pm
டெல்டா வைரஸை காட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதுடன் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். எனினும், ஒமைக்ரான் வைரஸால் அதிக ஆபத்தில்லை என்ற மனநிலை பரவலாகியுள்ளது.
Samayam Tamil Omicron


இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் இன்னும் ஆபத்து மிகுந்ததாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் மண்டல தலைவர் பூணம் கெத்ரிபால் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் The New Indian Express ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.

ஆபத்து மிகுந்த மக்களிடையே அதிக உயிரிழப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்கள், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது.

மியூசியமாக மாறும் ஐஎன்எஸ் குக்ரி போர்க்கப்பல்!
நோய் எதிர்ப்பு தன்மையை தாண்டியும் ஒமைக்ரான் பரவுவதற்கு சான்றுகள் அதிகம். ஒமைக்ரானால் நோய் பரவல் அதிகரித்தால் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகாதார அமைப்புக்கு சுமை அதிகரிக்கும்.

ஒமைக்ரான் வைரஸ் இன்னும் ஆபத்து மிகுந்ததாகவே உள்ளது. குறிப்பாக இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒமைரான் மிகவும் ஆபத்தான வைரஸ்” என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த செய்தி