ஆப்நகரம்

கர்நாடகாவில் கிங் மேக்கராக உருவாகிறது மதசார்பற்ற ஜனதா தளம்

கர்நாடகா சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை அமைக்கும் கிங் மேக்கர் என்ற இடத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உள்ளது.

Samayam Tamil 12 May 2018, 11:16 pm
பெங்களூரு : கர்நாடகா சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை அமைக்கும் கிங் மேக்கர் என்ற இடத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உள்ளது.
Samayam Tamil karnataka-election-2018


கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று நடைப்பெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடக்க உள்ளது.

இன்று தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் கருத்து கணிப்பு வெளிவந்தது. இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய முக்கிய பெரிய கட்சிகள் அதிக இடங்களை பிடித்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் அளவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளன.

இந்நிலையில் மூன்றாவது பெரிய கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி குறிப்பிடத்தகுந்த இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
இதனால் ஜனதா தளம் கட்சி எந்த கட்சியுடன் கூட்டு சேருமோ அந்த அணி தான் கர்நாடகத்தில் ஆட்சியை அமைக்கும் கிங் மேக்கராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு:
காங்கிரஸ் முதலிடம் :
டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 90-103 இடங்களும், பாஜக 80 -93 இடங்களும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) 31-39 இடங்களை பிடிக்கும் என முடிவுகள் வெளியிட்டுள்ளன.

ஆக்ஸிஸ் மை இந்தியா :
காங்கிரஸ் 11இடங்கள்
பாஜக 85 இடங்கள்
ஜனதா தளம் 26 இடங்கள்

சி-ஓட்டர்ஸ்:
காங்கிரஸ் 93இடங்கள்
பாஜக 103 இடங்கள்
ஜனதா தளம் 25 இடங்கள்
மற்றவை 1 இடம்

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு:
கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 106-118 இடங்களை பிடிக்கும்

பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்க வாய்ப்பு
மற்றவை 1-4 இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே செய்தி சேனல் வெளியிட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு:
காங்கிரஸ் 72- 78 இடங்கள்
பாஜக 102 - 110 இடங்கள்
மற்றவை 35 - 39 இடங்கள் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி