ஆப்நகரம்

அரசியலில் ஜொலிக்க ஆந்தையை விலைக்கு வாங்கும் தலைவர்கள்

மனித சமுதாயம் அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் எண்ணற்ற தன்னிறைவுகளை பெற்றிருந்தாலும் இதுவரை சில மூடநம்பிக்கைகளில் நமது சமூகம் புரையோடி போய் தான் உள்ளது.

Samayam Tamil 17 Mar 2018, 1:39 pm
பெங்களூரு : மனித சமுதாயம் அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் எண்ணற்ற தன்னிறைவுகளை பெற்றிருந்தாலும் இதுவரை சில மூடநம்பிக்கைகளில் நமது சமூகம் புரையோடி போய் தான் உள்ளது.
Samayam Tamil why owls are in great demand in karnataka
அரசியலில் ஜொலிக்க ஆந்தையை விலைக்கு வாங்கும் தலைவர்கள்


குறிப்பாக பல்லி தலையில் விழுந்தால் நல்ல சகுணம் அல்ல, சனி பகவானின் வாகனமாக கருதப்படும் காகம் ஒருவரை அடிப்பது நல்லதல்ல, வாகனத்தின் மீது பன்றி மோதினால் அதை உடனடியாக மாற்றி விட்டு வேறு வாகனம் வாங்குவது போன்றவை இன்னும் நமது சமூகத்தில் வலம் வரும் மூடநம்பிக்கைகள் ஆகும்.

இதேபோல் இரவு நேரங்களில் ஆந்தை வீடுகளின் முன்பு அலறுவது குடும்பத்திற்கு ஆகாது என்பதால் இன்னும் பல கிராமங்களில் இரவு நேரங்களில் கத்தும் ஆந்தைகளை விரட்டும் பழக்கம் உள்ளது. இப்படி குடும்பத்திற்கு ஆகாது என விரட்டப்படும் 'ஆந்தை' தற்போது ராசியான பறவையாக கர்நாடகத்தில் மாறி உள்ளது என்றால் மிகையல்ல.

இங்குள்ள பெரும்பாலான மக்களால் ஆந்தை லட்சுமி தெய்வத்தின் வாகனமாக நம்பப்படுகிறது. எனவே ஆந்தை தங்களது வீட்டில் இருந்தால் லட்சுமி தேவி தங்களது வீட்டிலேயே தங்கு விடுவார் என நம்புவதாக தெரிகிறது.

மேலும் அரசியல் வாழ்வு ஏற்றம்பெற ஆந்தையை வீட்டில் வளர்ப்பது நல்லது என இங்குள்ள அரசியல் தலைவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது. இதனால் திடீரென்று ஆந்தைக்கு மாநிலத்தில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு ஆந்தைக்கு சுமார் ரூ.3 லட்சம் வரை கொடுத்து அரசியல் தலைவர்கள் வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியலில் ஆந்தை என்பது அதிர்ஷ்டமா' அல்லது மூட நம்பிக்கையா' என்பது அதை வளர்க்கும் தலைவர்களுக்கு தேர்தல் முடிவில் தெரிய வரும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

அடுத்த செய்தி