ஆப்நகரம்

மதிய உணவுக்கு கூட ஆதார் எண்ணா? கொந்தளித்த கேரள முதல்வர்

மதிய உணவுக்கு கூட ஆதார் எண் தேவையா? என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 6 Mar 2017, 1:42 am
திருவனந்தபுரம்: மதிய உணவுக்கு கூட ஆதார் எண் தேவையா? என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil why should adhaar cards need for students free lunch scheme
மதிய உணவுக்கு கூட ஆதார் எண்ணா? கொந்தளித்த கேரள முதல்வர்


நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 கோடி மாணவர்கள் இலவச மதிய உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு, மதிய உணவு உண்ணும் மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது. அதற்கான கால அளவாக வரும் ஜூன் 30ஆம் தேதியை குறித்துள்ளனர். இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கை புரிந்து கொள்ள முடியாத வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதற்கான காரணம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் அந்த நடவடிக்கையால் மாணவர்கள் மதிய உணவு பெறுவதில் தடை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Why should Adhaar cards need for Students free lunch scheme.

அடுத்த செய்தி