ஆப்நகரம்

எதுக்காக ”போரும் அமைதியும்” புத்தகம் வச்சிருக்கீங்க? தப்பாச்சே- நீதிபதி கேள்வியால் வெடித்த சர்ச்சை!

வழக்கு ஒன்றின் விசாரணையில் “போரும் அமைதியும்” புத்தகம் வீட்டில் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு, நீதிபதி ஆட்சேபம் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

Samayam Tamil 29 Aug 2019, 6:49 pm
மஹர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மராட்டிய பேஷ்வா மன்னர்களோடு நடத்திய போர், வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதன் 200ஆம் ஆண்டு நினைவு பேரணி, கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பீமா-கொரேகான் கிராமத்தில் நடைபெற்றது.
Samayam Tamil Gonsalves


அப்போது மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சமூக செயற்பாட்டாளர் வெர்னோன் கொன்சல்வேஸும் ஒருவர். இவர் தனக்கு ஜாமீன் கோரி, மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தான் கமாண்டோக்கள்...!!

இந்த வழக்கு நீதிபதி சரங் கோட்வால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொன்சல்வேஸின் மும்பை இல்லத்தில் இருந்து சில புத்தகங்களும், சிடிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை மிகவும் ஆட்சேபகரமானவை.

இதைக் கருத்தில் கொண்டு கொன்சல்வேஸிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீசார் தரப்பில் கோரப்பட்டது. நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட்டவற்றில் லியோ டால்ஸ்டாய் எழுதிய ”போரும் அமைதியும்” என்ற புத்தகம் இடம்பெற்றிருந்தது.

ப. சிதம்பரம் கைது: ''குட் நியூஸ்"" என்று இந்திராணி முகர்ஜி வரவேற்பு!!

இது ரஷ்யா மீதான பிரான்சின் படையெடுப்பு, ஜார் மன்னர் ஆட்சியில் நெப்போலிய காலத்தின் தாக்கம் குறித்து விவரிக்கிறது. இந்தப் புத்தகத்துக்கும், ரஷ்யப் புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது கம்யூனிசம் பற்றிய நூலும் இல்லை.

ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட உன்னதமான உலக இலக்கியங்களில் இதுவும் ஒன்று. இதன் ஆங்கில திரைப்பட சிடி, ராஜ்ய தமன் விரோதி, மார்சிஸ்ட் கட்டுரைகள், ஜெய் பீமா காம்ரேட் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இவற்றை ஆராய்ந்து பார்த்த நீதிபதி, எதற்காக “போரும் அமைதியும்” புத்தகத்தை வைத்திருக்கிறீர்கள்? இந்த புத்தகம் ரஷ்யாவில் நடந்த போரை பற்றிய புத்தகம்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக ராஜினாமா செய்த கண்ணணுக்கு கிடுக்கிப்படி!!

இதுவொரு ஆட்சேபிக்கக் கூடிய ஆவணங்களில் ஒன்று. இதற்கு நீங்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ”போரும் அமைதியும்” நூலை வைத்திருந்ததை நீதிமன்றம் ஆட்சேபித்தது, பரவலான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அடுத்த செய்தி