ஆப்நகரம்

பேச்சை குறைக்குறேன்: ரேடியோவில் ஷாக் கொடுத்த மோடி!

வரும் சுதந்திர தின விழாவில் தனது உரையை சுருக்கமாக முடித்துவிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி கூறியுள்ளார்.

TNN 30 Jul 2017, 3:48 pm
டெல்லி: வரும் சுதந்திர தின விழாவில் தனது உரையை சுருக்கமாக முடித்துவிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி கூறியுள்ளார்.
Samayam Tamil will keep independence day speech under 50 minutes pm modi
பேச்சை குறைக்குறேன்: ரேடியோவில் ஷாக் கொடுத்த மோடி!


பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் அகில இந்திய வானொலியின் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதன்படி, 34வது முறையாக இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரை பற்றி குறிப்பிட்டார்.

“கடந்த மூன்று ஆண்டுகளாக எனது சுதந்திர தின உரை சற்று நீண்டதாக இருப்பதாக கடிதங்கள் மூலம் கருத்துக்கள் வந்திருக்கின்றன. எனவே, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி எனது சுதந்திர தின உரையை 40 முதல் 50 நிமிடத்திற்குள் முடித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

“இந்த ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். எனவே, ஆகஸ்ட் 15ஆம் தேதி தீர்வுகாணும் நாளாக கடைபிடிக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும் வரும் சுதந்திர தினத்தை தூய்மையின்மை, ஏழ்மை, பயங்கரவாதம், சாதியம், வகுப்புவாதம் ஆகியவற்றிற்கு தீர்வுகாணும் நாளாகக் கொள்ள வேண்டும்” என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி