ஆப்நகரம்

தேர்தல் சமயத்தில் எடுபடுமா மம்தாவின் போராட்டம்?

மம்தாவின் தர்ணா போராட்டத்தில் அரசியல் காரணங்கள் உள்ளன என பாஜ., குற்றஞ்சாட்டுகிறது. அதேபோல பாஜ., மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க முயல்வதாக மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 5 Feb 2019, 10:05 pm
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
Samayam Tamil mamtha banerjee


இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

கல்கத்தா மாநில காவல் உயரதிகாரிகள் வெள்ளை உடை அணிந்து இந்த தர்ணாவில் ஈடுபடுகின்றனர். இது வெட்கக்கேடான செயல். மம்தா மத்திய அரசு ஏஜன்ஸியான சிபிஐ அதிகாரிகளை எதிர்த்து அரசியல் செய்கிறார் என பாஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜ., தொடர்ந்து மத்திய உளவுத்துறையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மாநிலங்களில் அதிகாரங்களை அடக்க முயல்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிக்க இப்போராட்டம் தொடரும் என்றுள்ளார் மம்தா. இதற்கு சந்திர பாபு நாயுடு, ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி