ஆப்நகரம்

எங்களைக் காப்பாற்றுங்கள்; இல்லையெனில் நிர்வாணப் போராட்டம் தான்; கதறும் தமிழக விவசாயிகள்!

புதுடெல்லி: தலைநகரில் லட்சக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 30 Nov 2018, 1:57 pm
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். அங்கு இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை ராமலீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியைத் தொடங்கினர்.
Samayam Tamil Farmers.


வேளாண் கடன் ரத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். தமிழகத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். பலரும் உயிரிழந்த தங்கள் தோழர்களின் எலும்புகளுடன் போராடி வருகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்டமாக நாடாளுமன்றம் நோக்கி நிர்வாணப் போராட்டம் நடத்தக்கூடும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, நாங்கள் குறைந்தபட்ச விலையைத் தான் கேட்கிறோம். வேளாண் கடன் மற்றும் லாபகரமான விலை உள்ளிட்டவற்றை அரசு எங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.

இல்லையெனில் நிர்வாணப் போராட்டம் தான் அடுத்த வழி என்று தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி