ஆப்நகரம்

எனக்கா சிடி வெளியிடுறீங்க; உங்கள சந்தி சிரிக்க வைக்கிறேன்; பாஜகவை எதிர்க்கும் ஹர்திக் படேல்!

பாஜக பற்றி அதிரத்தக்க உண்மைகளை வெளியிடுவேன் என்று ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.

TNN 18 Nov 2017, 5:33 pm
காந்திநகர்: பாஜக பற்றி அதிரத்தக்க உண்மைகளை வெளியிடுவேன் என்று ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.
Samayam Tamil will release dangerous truths about bjp says hardik patel
எனக்கா சிடி வெளியிடுறீங்க; உங்கள சந்தி சிரிக்க வைக்கிறேன்; பாஜகவை எதிர்க்கும் ஹர்திக் படேல்!


குஜராத்தில் படேல் இனத்தவர்களை, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி, 2 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் தலைமை வகித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் படேல் இனத்தவர்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ், பாஜக கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

இதில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக ஹர்திக் படேல் கூறினார். இதையடுத்து படேல் இன தலைவர்களை பாஜகவில் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படேல் இனத்தவர் மான்சா பகுதியில் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து பற்றி பேசிய ஹர்திக் படேல், என் மீது பாலியல் புகார் சுமத்தி சிடி வெளியிடப்பட்டது.

விரைவில் பாஜகவை பற்றி அதிரடியான உண்மை ஒன்றை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

Will release dangerous truths about BJP says Hardik Patel.

அடுத்த செய்தி