ஆப்நகரம்

இந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்குமா?

தமிழகத்தில் தோராயமாக 4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுள் ஒரு கோடி பேர் தேர்தல் சமயத்தில் வாக்களிப்பதில்லை. ஒவ்வொரு மத்திய மாநில தேர்தல் சமயங்களிலும் ஒரு கோடி வாக்குகள் குறைந்து 80 சதவீத வாக்குகள் மட்டுமே சராசரியாக பதிவாகின்றன.

Samayam Tamil 26 Mar 2019, 9:35 pm
தமிழகத்தில் தோராயமாக 4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுள் ஒரு கோடி பேர் தேர்தல் சமயத்தில் வாக்களிப்பதில்லை. ஒவ்வொரு மத்திய மாநில தேர்தல் சமயங்களிலும் ஒரு கோடி வாக்குகள் குறைந்து 80 சதவீத வாக்குகள் மட்டுமே சராசரியாக பதிவாகின்றன.
Samayam Tamil TH26TN-pollcol

இதற்கு பல காரணங்கள் உண்டு. வெளியூர்களில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் வாக்கு செலுத்த சொந்த ஊருக்கு வருவதில்லை. பலரது அலட்சியத்தாலும் வேலை பளுவாலும் வாக்கு எண்ணிக்கை குறைகிறது. இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

வாக்கு செலுத்துவதன் அவசியத்தை உணர்த்த பல தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. பல இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இது போதாது என சினிமா பிரபலங்கள் விளம்பரங்களில் தோன்றி வாக்குக்கு பணம் வாங்காதீர், வாக்கு செலுத்த தவறாதீர் என பிரசாரம் செய்கின்றனர். ஆனாலும் வாக்கு சதவீத எண்ணிக்கை உயர்ந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக இளம் தலைமுறை வாக்கு செலுத்த சோம்பல் படுகின்றனர்.

1998 லோக் சபா தேர்தலின்போது இந்தியா முழுவது வெறும் 57. 8 சதவீத வாக்குகளே பதிவானது. பாதிக்கு பாதி வாக்குகள் செலுத்தப்படவில்லை. மக்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாமல் விடுவதால்தான் தவறானவர்கள் ஆட்சிபீடத்தில் ஏறுகின்றனர் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

பல தனியார் நிறுவனங்கள் தேர்தலின்போது வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை. இதுபோன்ற நிறுவனங்கள்மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் இந்த அத்துமீறல் நடந்துகொண்டுதான் இருக்குறது.

மக்களுக்கு மக்களவைத் தேர்தல் குறித்த போதிய விழுப்புணர்வு இல்லை என்கிறார் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்.

தேர்தல் கமிஷன் மூத்த அதிகாரி நரேஷ் குப்தா கூறும்போது, தேர்தல் காமிஷனின் சீரிய முயற்சி காரணமாக வாக்கு எண்ணிக்கை எதிர்காலத்தில் கட்டாயம் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த செய்தி