ஆப்நகரம்

வழக்குகள் தேக்கத்தை சமாளிக்க நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்

தேங்கியிருக்கும் வழக்குகளைச் சமாளிப்பமது பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி ரஞ்சன் கோகோய் பேசியுள்ளார்.

Samayam Tamil 30 Sep 2018, 3:15 pm
தேங்கியிருக்கும் வழக்குகளைச் சமாளிக்க சமாளிப்பதற்கான திட்டங்கள் தன்வசம் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 10DELPRIYASCJUDGEe


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவி காலம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முடிகிறது. அடுத்த புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் அக்டோபர் 3ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கம் பற்றி கவலை தெரிவித்துப் பேசினார்.
“சிவில் வழக்குகள் இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு பின் தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் வாழும் காலம் முடிந்த பின்தான் வழக்கு விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படுகிறது.” என்றார். மேலும், தேங்கியிருக்கும் வழக்குகள் நீதிமன்றத்துக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது எனக் கூறிய அவர் இதனைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் தன்வசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி