ஆப்நகரம்

டிசம்பர் 11ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த முடிவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 11ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 9:18 pm
நாடாளுமன்ற கூட்டத்தொடரை டிசம்பர் 11ம் தேதி நடத்த, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது
Samayam Tamil parliament


வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் நடைபெறும். ஆனால், இந்த வருடம் தற்போது ஐந்து மாநில தேர்தல் நடைபெறுவதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்த முடியவில்லை. இந்நிலையில், டிசம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்) மாலை நடைபெற்ற ஆலோசனைக்குப் பின், நாடாளுமன்ற கூட்டத்தொடரை டிசம்பர் 11ம் தேதி நடத்த, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஜய் கோயல் கூறியுள்ளார். மேலும், இந்த கூட்டத்தொடரின் போது அனைத்து கட்சிகளும் தங்களது வாதத்தை அமைதியான முறையில் கூறி, கூட்டத்தொடர் நடத்த ஒத்துழைப்பு தருமாறும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி