ஆப்நகரம்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: விழி பிதுங்கும் மக்கள்!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துவரும் நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Samayam Tamil 10 Feb 2021, 7:57 am
காற்று மாசுபாடு விவகாரம் டெல்லியை தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள் வைத்துள்ளது. டெல்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் ஆகியவை காரணமாக காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கிறது.
Samayam Tamil Delhi air pollution


அண்டை மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் விவசாய கழிவுகளால்தான் தலைநகர் டெல்ல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது என புகார் எழுந்தது. ஆனால் அந்த வகையில் ஏற்படும் மாசுபாட்டைவிட பழைய வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலை கழிவுகளால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்டபொதுமுடக்கத்தால் நீர்நிலைகள் தெளிவுடன் காணப்பட்டன. காற்றில் மாசு அளவு குறைந்து காற்றின் தரமும் உயர்ந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் தொடர்ந்து, காற்றின் தரமும் மோசமடைந்து வருகிறது.
இலங்கையுடன் கை கோர்க்கும் சீனா: இந்தியாவுக்கு ஆபத்து!
பருவநிலை மாற்றத்தினால் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் குறைந்த வேகத்திலேயே இயங்குகின்றன.
ஆந்திராவில் அண்ணன்; தெலங்கனாவில் தங்கச்சி: ஆட்டம் ஆரம்பம்!
டெல்லியில் ஒட்டு மொத்த காற்று தர குறியீடு 325 என்ற அளவில் உள்ளது. இதனால், காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கிறது. இதனை காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி