ஆப்நகரம்

''ஐயப்பா ஐயப்பா'' என்ற பக்தி கோஷங்களுடன் நடை திறப்பு..!

சபரிமலையில் மண்டலபூஜை துவங்கப்படவுள்ளதை அடுத்து இன்று கோவிலை நடை திறக்கப்பட்டது.

Samayam Tamil 16 Nov 2019, 10:42 pm
சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க கூடாதென உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. ஆனால் பெரும்பான்மை நீதிபதிகளின் மாற்று கருத்தினால் ஒரே முடிவை எடுப்பதில் இயலவில்லை.
Samayam Tamil ஐயப்பா ஐயப்பா என்ற பக்தி கோஷங்களுடன் நடை திறப்பு..!


இதனால் இந்த விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற பழைய உத்தரவு தொடர்கிறது.


தாஜ்மஹாலை நிலவு ஒளியில் பார்க்க புதிய ''வியூ பாய்ண்ட்''..!

ஆனாலும் இந்து அமைப்பினர் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு நடுவே மண்டல பூஜைக்காக திட்டமிட்டபடி கோயில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..!

நடை திறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு நடை மூடப்பட்டதும் மேல்சாந்தியாக இருந்து வந்த நாராயண நம்பூதிரி, கோயிலின் சாவியை புதிய மேல்சாந்தியாக பொறுப்பேற்கவுள்ள சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும். கார்த்திகை பிறக்கும் நாளை அதிகாலை முதல் நடையில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி