ஆப்நகரம்

இங்கிலாந்து டூ இந்தியா; வைரஸ் பாதித்த பெண் தப்பி ஓட்டம் - அடுத்து நடக்கப் போகும் ஷாக்!

புதிய வகை கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து பயணிகள் பலருக்கு வைரஸ் தொற்று அதிகரித்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Samayam Tamil 24 Dec 2020, 2:44 pm
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இது தற்போதைய கொரோனா வைரஸை விட வீரியத்துடன் பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பிற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. அதேசமயம் கடந்த சில வாரங்களில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியலை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது. அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Coronavirus in Delhi


அதில், 20 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் மேலும் 9 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 29ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இது புதிய வகை கொரோனா வைரஸா என்று உறுதிப்படுத்தப்பட வில்லை. எனவே பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களில் 6 பேர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.

கடைகள் இயங்காது; வாகனங்கள் ஓடாது - அமலுக்கு வந்தது ஊரடங்கு!

அவர்களில் புவனேஸ்வர், பெங்களூரு, ராஜமுந்திரியை சேர்ந்த ஒருவர் அடங்குவர். இவர்களது மாதிரிகள் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு புதிய வகை கொரோனா வைரஸா என்று ஆராயப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்து கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பெண், யாரிடமும் சொல்லாமல் மாயமாகி உள்ளார். இதனால் பொதுமக்களிடையே அச்சம் கூடியுள்ளது. அவருக்கு ஏற்பட்டது புதிய வகை வைரஸ் பாதிப்பா?

2020ம் ஆண்டில் திருமணம் செய்த ராணா, காஜல், மகத், யோகி பாபு...

இது பலருக்கும் பரவியிருக்குமா? எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி