ஆப்நகரம்

பெங்களூருவில் அதிர்ச்சி; தீச்சுடர் மதுவை அருந்திய பெண் - டம்ளர் வெடித்ததில் பயங்கரம்!

தீச்சுடர் மதுபானத்தை அருந்த முயற்சித்த பெண்ணிற்கு உணவுக்குழாயில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 May 2019, 3:51 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள ஓட்டலில் ஏராளமானோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பெண் ஒருவர் தீச்சுடர் எரியும் வகையிலான மதுவை அருந்தத் தொடங்கினார்.
Samayam Tamil Flaming Shot


அப்போது வெப்பத்தின் காரணமாக கண்ணாடி டம்ளர் உடைந்தது. அதில் அப்பெண்ணிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டின் பிப்ரவரி மாதம், 28 வயதான வழக்கறிஞர் ஒருவர், ரெசிடன்சி சாலையில் உள்ள பாரில் தீச்சுடர் மதுவை அருந்தினார்.

அப்போது உணவுக் குழாய், இரைப்பை உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்தவித உதவிகளையும் செய்ய முன்வராத ஊழியர் மீது அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய நிகழ்வு கடந்த மே 3ஆம் தேதி, இரவு 11.30 மணிக்கு நடந்துள்ளது. டெல்லியில் உள்ள ஏர்லைன் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மூத்த நிர்வாகி இடிஸ்ரீ(42) கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு வந்துள்ளார். ஓட்டலில் சில நாட்கள் தங்கியுள்ளார்.

அவரது உடன் பணியாற்றும் குர்கிராமைச் சேர்ந்த ஆர்.சி.பன்வார் ஒயிட்ஃபீல்டு போலீசாரிடம் கூறுகையில், இருவரும் டின்னருக்கு சென்றிருந்த போது, தீச்சுடர் மதுவை அருந்தினோம். அப்போது கண்களை மூடிக் கொண்டு, மடக்கென குடித்துவிட வேண்டும் என்று பார் ஊழியர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இடிஸ்ரீ தீச்சுடர் மதுவை குடிக்கையில், கண்ணாடி டம்ளரின் துண்டு வாயில் விழுந்துள்ளது. இதை உணர்ந்த அப்பெண், வெளியில் துப்பியுள்ளார். இருப்பினும் வாய்ப் பகுதியை காயப்படுத்தி உள்ளது. இதையடுத்து பார் மேனேஜர் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் மிக மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசில் புகார் அளித்து விட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர். இதுகுறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ், ஒயிட்ஃபீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி