ஆப்நகரம்

தாலியை கழற்றிவிட்டு தேர்வு எழுத வற்புறுத்தப்பட்ட பெண்கள்

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வு எழுத பெண்கள் தாலியை கழற்றிக்கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 17 Sep 2018, 5:59 pm
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வு எழுத பெண்கள் தாலியை கழற்றிக்கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil LRG_20180115155554343847


தெலங்கானாவில் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TSPSC) நடத்தும் கிராம வருவாய் அதிகாரி தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 700 காலியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2,000 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

நார்சபூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை தாலியைக் கழற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பலரும் இதனை ஏற்க மறுத்து கெஞ்சியபோதும் தாலியைக் கழற்றிய பின்பே தேர்வு எழுத முடியும் என்று கூறியதால், தாலியைக் கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றிருக்கின்றனர்.

இந்த ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 290 திருமணமான பெண்கள் இவ்வாறு தாலியைக் கழற்றிவிட்டு தேர்வு எழுதியதாக தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி