ஆப்நகரம்

வரலாற்று துரோகம் செய்துவிடாதீர்கள் - மன்மோகன் சிங் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

இந்தியா - சீனா எல்லையில் நமது ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 22 Jun 2020, 10:30 am
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஜூன் 15- 16, 2020ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்களை இழந்து நிற்கிறோம். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காப்பதற்காக போராடியுள்ளனர்.
Samayam Tamil மன்மோகன் சிங்


இதற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவர்களது உயிர் தியாகம் வீண் போகக் கூடாது. இந்த சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.

சீன நிறுவனங்களுடன் ரூ.5,000 கோடி புரோஜக்ட் - அதிரடி முடிவெடுத்த மாநில அரசு!

இதன்மூலமே வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர். ஜனநாயக நாட்டில் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய நிலையில் பிரதமர் இருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பைக் கருதி பிரதமர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், எடுக்கும் முடிவுகளையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

கடந்த ஏப்ரல் 2020ல் இருந்து பல்வேறு ஊடுருவல்களின் மூலம் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் சோ ஏரி உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா முறைகேடாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் கீழ்ப்படியக் கூடாது.

இந்த விஷயம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தாத வகையில் அரசின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் பிரதமர் முடிவெடுக்க வேண்டும். இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டும்.

கோவிட்-19 மீண்டும் மிகப்பெரிய உச்சம்; பலி, பாதிப்பில் ஒரே அடியாய் தாவிய இந்தியா!

வெளியில் இருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம் ஆகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி