ஆப்நகரம்

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரம்; கர்நாடகாவில் நாளை ’பந்த்’; எடியூரப்பா உறுதி!

திட்டமிட்டபடி கர்நாடகாவில் பந்த் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 May 2018, 8:03 am
பெங்களூரு: திட்டமிட்டபடி கர்நாடகாவில் பந்த் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Yeddyurappa
எடியூரப்பா


கர்நாடக மாநிலம் பெங்களூரு டாலர்ஸ் காலனியிலுள்ள வீட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் பரப்புரையில் விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று குமாரசாமி கூறியிருந்தார்.

ஆனால் அதிகாரத்துக்கு வந்ததும் எதுவும் செய்யவில்லை. தனிக்கட்சியாக ஆட்சியை பிடித்திருந்தால் தள்ளுபடி செய்வேன் என்று கூறுகிறார். ஆனால் நாங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் வரை போராடுவோம்.

இதற்காக நாளை மாநிலம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளே முன்னெடுப்பர். ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நாளை தேர்தல் நடப்பதால், பெங்களூருவில் மட்டும் பந்த் நடைபெறாது.

ராஜராஜேஸ்வரி நகர், ஜெயா நகர் தொகுதிகளில் மக்கள் பாஜகவிற்கு ஆதரவளிப்பர் என்று நம்புகிறோம் என்று எடியூரப்பா கூறினார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாநிலத்தின் நிதி நிலை ஆய்வு செய்து, கடன் தள்ளுபடி குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Yeddyurappa calls strike in Karnataka tomorrow.

அடுத்த செய்தி