ஆப்நகரம்

Karnataka BJP: கர்நாடகாவில் விக்கெட் வீழ்த்திய சந்தோஷத்தில் கிரிக்கெட் விளையாடும் எடியூரப்பா!!

ஆளும் தரப்பு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்த மகிழ்ச்சியில், எடியூரப்பா எம்.எல்.ஏக்களுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடி வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Samayam Tamil 17 Jul 2019, 11:18 am
கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் ராஜினாமா ஏற்கப்படாததை அடுத்து, 15 பேர் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
Samayam Tamil Yeddyurappa


சபாநாயகர் தனது ஜனநாயகக் கடமையை சரியாக ஆற்றவில்லை என்றும், அவர் தங்கள் ராஜினாமாவை ஏற்க உத்தரவிடுமாறும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

சபாநாயகருக்கே முழு அதிகாரம் - கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அதில் சபாநாயகருக்கே முழு அதிகாரம் என்றும், ராஜினாமாவை ஏற்க காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் உடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

கர்நாடகாவில் இருந்து காவிரியில் நீர் திறப்பு!

மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் என்று எடியூரப்பா மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். இதையொட்டி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை, கட்சி எம்.எல்.ஏக்கள் உடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை என பிஸியாக எடியூரப்பா இருந்து வருகிறார்.

சமஸ்கிருதத்தை விமர்சித்த வைகோவை ராஜ்ய சபா உறுப்பினராக மறுப்பு தெரிவிக்கும் சுப்ரமணிய சாமி!

இதற்கிடையில் நேற்று பெரும்பான்மையான நேரத்தை எலஹங்காவில் உள்ள ஓட்டலில் பொழுதைக் கழித்தார். அங்கு தனது கட்சி சகாக்கள் உடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக புகைப்படத்தை மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி