ஆப்நகரம்

கர்நாடகா முதல்வராக இன்று மாலை பதவி ஏற்கிறார் எடியூரப்பா

கர்நாடகா சட்டமன்றத்தில் கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்த நிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வராக எடியூரப்பா இன்று பொறுப்பேற்க உள்ளார்.

Samayam Tamil 26 Jul 2019, 11:48 am
கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா, ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
Samayam Tamil Yeddyurappa Oath


கர்நாடகாவில் பல்வேறு அரசியல் குழப்பங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த 23ம் தேதி மாலை 7 மணிக்கு மேல் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

Also Read: கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிரடி

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து குமாரசாமி தனது சகாக்களுடன் சேர்ந்து பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா பாஜக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா இன்று காலை மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இன்று மாலை எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

Also Read: பெண் வயிற்றில் கிலோ கணக்கில் நகைகள், நாணயங்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!

எடியூரப்பா 4வது முறையாக கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இன்றைய தினம் எடியூரப்பா மட்டும் பதவியேற்க உள்ளார்.

31ம் தேதி கெடு
பாஜகவுக்கு 105 சட்டமன்ற உறுப்பினர்களும், 2 சுயேட்சைகளின் ஆதரவும் உள்ளது. இந்நிலையில் எடியூரப்பா வருகின்ற 31ம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார்.

அடுத்த செய்தி