ஆப்நகரம்

அயோத்தியில் ராம ராஜ்ஜியம் அமைப்பேன்: யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் வளர்ச்சியின் மூலம் ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்புவதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

TNN 19 Oct 2017, 1:00 pm
அயோத்தியில் வளர்ச்சியின் மூலம் ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்புவதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil yogi adityanath needs to create ramrajam in ayodhya
அயோத்தியில் ராம ராஜ்ஜியம் அமைப்பேன்: யோகி ஆதித்யநாத்


தீபாவளியை ஒட்டி அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், ''ராம ராஜ்ஜியம் என்றால் வளர்ச்சி, ஏழ்மையற்ற ஏற்றத்தாழ்வுகள் அற்ற நிலையை உருவாக்குவதுதான். அனைவருக்கும் வீடு, மின்சாரம், மற்றும், சமையல் எரிவாயு வழங்குவதே எனது நோக்கம்.

சிலர் நான் என்ன சொன்னாலும், செய்தாலும் அதை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அயோத்திக்கு வந்தால் இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதாகவும், வராவிட்டால் அயோத்தி வருவதற்கு தைரியமில்லை எனவும் விமர்சிக்கின்றனர்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் தீபங்கள் சரயு நதிக்கரையில் ஏற்றப்பட்டன. புஷ்பக விமானம் போல் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் யோகி ஆதித்யநாத் ராம் கதா பூங்காவில் இறங்கினார். மற்றொரு ஹெலிகாப்டர் வானில் இருந்து மலர்களை தூவியது.

yogi adityanath needs to create ramrajam in ayodhya

அடுத்த செய்தி