ஆப்நகரம்

#EVM என்றால் எல்லா ஓட்டும் மோடிக்கே: யோகி ஆதித்யநாத் புது விளக்கம்

EVM என்பதற்கு ‛Every Vote Modi' என்று அர்த்தம் என, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

TNN 30 Apr 2017, 2:14 pm
EVM என்பதற்கு ‛Every Vote Modi' என்று அர்த்தம் என, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil yogi adityanath takes dig at kejriwal says evm stands for every vote modi
#EVM என்றால் எல்லா ஓட்டும் மோடிக்கே: யோகி ஆதித்யநாத் புது விளக்கம்


சமீபத்தில் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில், பாஜக பெரும்பான்மை இடங்களை வென்றது. இதற்கு, ஈவிஎம் அதாவது, வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ததே காரணம் என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதேபோன்று மற்ற கட்சிகளும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், ஈவிஎம் என்றால் எல்லா ஓட்டுகளுமே பிரதமர் மோடிக்கு என்பதை, டெல்லி மக்கள் தற்போதைய தேர்தலில் காட்டியுள்ளதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புது விளக்கம் அளித்துள்ளார்.

கோரக்பூரில் நடைபெற்ற பாஜக., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். மேலும், டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பாஜக., சாதனை வெற்றிபெற்றுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கோளாறு சொன்னவர்கள் இப்போது எந்த பதிலும் சொல்ல முடியாது, வாயடைத்துப் போயுள்ளனர். பாஜக.,வின் வெற்றியும், பிரதமர் மோடியின் சாதனைகளும் தொடரும்,’’ என்றும் குறிப்பிட்டார்.

Taking a dig at Arvind Kejriwal, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath said that Delhi civic poll results were a befitting reply to those who questioned EVMs and people have shown these alphabets stand for 'every vote Modi'.

அடுத்த செய்தி