ஆப்நகரம்

தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஹரியானாவில் கைப்பேசி பயன்படுத்தியதற்காக தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 3 May 2018, 3:32 pm
ஹரியானாவில் கைப்பேசி பயன்படுத்தியதற்காக தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil harayana-young-girl
தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


ஹரியானாவின் சந்த்பூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் மது சம்பவம் நடந்த அன்று தனது தாயிடம் வீட்டில் இருந்துள்ளார். பிஎஸ்சி படித்து வந்த அப்பெண் அடுத்த வாரம் நடக்கும் பல்கலைக்கழக தேர்வை எதிர்கொள்ள இருந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மகள் மது யாரோ ஒருவருடன் கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்த போது, அவரது தாய் மற்றும் தந்தை கண்டித்துள்ளனர். இதை தொடர்ந்து சம்பவம் நடந்த நாளில் காலையில் யாருக்கும் தெரியாமல் மது கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அதை பார்த்த மதுவின் தாய், அவரை திட்டியுள்ளார். அந்நேரம் பார்த்து அவரது தந்தையும் வீட்டிற்கு வர மனமுடைந்த மகள் தனது அறைக்குள் நுழைந்துக்கொண்டார். அப்போது துப்பாகிச்சுடும் சத்தம் பெற்றோருக்கு கேட்டுள்ளது.

இதைக்கண்டு பதறிப்போய் அவர்கள் அறை கதவை திறந்து பார்த்து போது, மகள் மது துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் ஆணையர் அமித் குமார், மதுவின் தற்கொலை தொடர்பாக பெற்றோரிடம் விசாரித்தார். அப்போது பெண்ணின் தந்தை கரம்வீர் சிங் முன்னாள் ராணுவ வீரர் என்பதால் வீட்டில் துப்பாக்கி இருந்ததாக தெரிவித்தார்.

பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளம் பெண் தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஹரியானாவின் சந்த்பூர் கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி