ஆப்நகரம்

பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து-11 பச்சிளம் குழந்தைகள் பலி..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்,பிறந்த சில நாட்களே ஆன 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியாகின.

TNN 10 Aug 2016, 4:47 pm
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்,பிறந்த சில நாட்களே ஆன 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பலியாகின.
Samayam Tamil 11 newborns dead in baghdad hospital fire
பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து-11 பச்சிளம் குழந்தைகள் பலி..!


பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள யார்முக்கில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஒரே பெரிய மருத்துவமனை என்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும்.

இந்நிலையில் நேற்று இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் திடீரென தீப்பற்றியது.தீப்பற்றியதை யாரும் கவனிக்காததால்,சில நிமிடங்களில் தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவியது.அந்த பகுதியில்தான் பிறந்த சில நாட்களே ஆகியிருந்த பச்சிளம் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தன.யாரும் உள்ளே போக முடியாத அளவுக்கு தீயின் தாக்கம் இருந்ததால்,தீயில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த 11 குழந்தைகள் தீயில் கருகி பலியாகின.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்,3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மருத்துவமனையில் இருந்த மின்சார வயர்களில் ஏற்பட்ட உராய்வே தீவிபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.போர் மற்றும் ஐஎஸ் அமைப்பின் ஆதிக்கம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக இருப்பதால் இது போன்ற விபத்துகள் அங்கு சர்வசாதாரணமாகிவிட்டன.

அடுத்த செய்தி