ஆப்நகரம்

குரோஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சிறுமி பரிதாபமாக பலி!

குரோஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Dec 2020, 9:54 pm
குரோஷியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Croatia


மத்திய குரோஷியாவில் 6.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

சாக்லேட்டும் பீரும் அத்தியாவசியம்தான்: அரசு அதிரடி உத்தரவு!
மத்திய குரோஷியாவில் உள்ள பெட்ரிஞ்சா நகரில்தான் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 20,000 பேர் வசிக்கின்றனர். இந்நகரில் சாலைகள் தோறும் செங்கற்கள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்கள் கிடக்கின்றன.

இதுகுறித்து குரோஷியா பிரதமர் அண்ட்ரெஜ் பிளெங்கோவிக், “ஒரு சிறுமி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்கள் குறித்து கூடுதல் தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமிக்கு 12 வயது என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நகரில் ஏற்பட்டுள்ள சேதத்தை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நகரமே மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், மக்களை பாதுகாக்க தீவிரமாக முயற்சித்து வருவதகவும் மேயர் டரிங்கோ டம்போவிக் தெரிவித்துள்ளார்.

என்ன தைரியம் இருந்தால் 'அவர்' பெயரை பயன்படுத்துவீங்க ஜூலி?
கட்டிடங்களில் சிக்கியிருப்போரை மீட்பதற்காக மீட்பு படையினரும், ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் சீரியஸான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி