ஆப்நகரம்

மெக்ஸிகோ சுவர் விவகாரம்; டிரம்புக்கு எதிராக வழக்கு

அமெரிக்கா – மெக்சிகோ இடையே தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.

Samayam Tamil 19 Feb 2019, 9:06 am
அமெரிக்கா – மெக்சிகோ இடையே தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாகத் தெரிவித்து இருந்தார்.
Samayam Tamil trump


சட்டவிரோதமாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய தடுப்புச் சுவரை கட்டுவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக இருந்தார். இதற்காக 5 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கும்படி டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டது. ஆனால், இதற்கு நிதியை ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்த்தது. மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்புக்கும், ஜனநாயக கட்சிக்கும் சமரசம் ஏற்படாததால் வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட 9 அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின.

இந்த விவகாரத்தில் தற்போது, அவசர நிலையை அறிவித்த அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நியுயார்க் உள்பட 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள போதும் அதிபரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுப்புச் சுவர் அமைப்பதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து சட்ட நடவடிக்கை மூலம் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஒப்புதலின்றி தன்னிச்சையாக டிரம்ப் முடிவெடுத்து எல்லை சுவரை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியதற்கு எதிராக சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி