ஆப்நகரம்

லண்டன் குண்டுவெடிப்பு: 18 வயது இளைஞர் கைது

லண்டன் சுரங்க ரயிலில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக, 18 வயது லண்டன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 16 Sep 2017, 6:53 pm
லண்டன்: லண்டன் சுரங்க ரயிலில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக, 18 வயது லண்டன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil 18 year old arrested in connection with london underground blast
லண்டன் குண்டுவெடிப்பு: 18 வயது இளைஞர் கைது


நேற்று லண்டனில் சுரங்கப்பாதை ரயிலில் பிளாஸ்டிக் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 29 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக டோவர் துறைமுகப் பகுதியில் 18 வயது இளைஞரை கென்ட் போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்மீது வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

குண்டுவெடிப்பு குறித்து துணை காவல்துறை ஆணையர் நீல் பாசு கூறுகையில், “பாதுகாப்புத் துறையில் இருந்து வந்த தகவல்களின்படி மறுபடியும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், இங்கிலாந்து முழுவதும் உயர்மட்ட பாதுகாப்பு நிலையை பிரதமர் தெரசா மே அமல்படுத்தியுள்ளார்”, என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். இதனால் இங்கிலாந்து மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

18-year-old arrested in connection with London Underground blast.

அடுத்த செய்தி