ஆப்நகரம்

அமெரிக்க அழகியான 25 வயது இளம் விஞ்ஞானி!

அமெரிக்காவின் அழகியாக 25 வயது இளம் விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 16 May 2017, 10:58 am
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் அழகியாக 25 வயது இளம் விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil 25 year old young scientist becomes miss america
அமெரிக்க அழகியான 25 வயது இளம் விஞ்ஞானி!


அமெரிக்காவின் அழகிப்போட்டிக்கு 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 3 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில் வாஷிங்டனின் காரா மெக்கல்லோ (25 வயது). நியூஜெர்ஸியின் சாவ்வி வெர்ஜ். மினசோட்டா மெரிடித் கோல்ட். இவர்களிடம் நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு காரா மெக்கல்லோ சாமத்தியமாக பதிலளிக்க, ‘மிஸ் அமெரிக்கா’ வாக தேர்வு செய்யப்பட்டார்.

காரா மெக்கல்லோ வேதியியல் படிப்பில் பட்டம் பெற்று, அமெரிக்க அணு ஆணையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இதையடுத்து காரா மெக்கல்லோ பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்க்கவுள்ளார்.

அடுத்த செய்தி