ஆப்நகரம்

சீனாவில் கனமழை : 250 பேர் பலி, 2 லட்சம் பேர் பாதிப்பு?

சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 250 பேர் பலி ஆகியிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றது.

TOI Contributor 24 Jul 2016, 3:48 pm
பீஜிங் : சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 250 பேர் பலி ஆகியிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றது.
Samayam Tamil 250 killed or missing in china rains 2 5 lakh people trapped
சீனாவில் கனமழை : 250 பேர் பலி, 2 லட்சம் பேர் பாதிப்பு?

சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹூபி மாகாணத்தில் 111 பேர் காணவில்லை என்றும், 114 பேர் ஆபாத்தான பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், ஹெனான் மாகாணத்தின் அன்யாங் நகரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காணவில்லை என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 138 பேர் இறந்திருக்கலாம் எனவும், காணாமல் போன 120 பேரை தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 92 ஆயிரம் பேரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் 54, 600 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாஷமானதாகவும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அடுத்த செய்தி