ஆப்நகரம்

தமிழ் அகதிகளுக்கான வழக்கறிஞர் வீட்டில் தீவிபத்து: மூவர் பலி

நியூசிலாந்தில் தமிழ் அகதிகளுக்காக நீண்டகாலமாக பணியாற்றிவரும் வழக்கறிஞர் வீட்டில் ஏற்பட்ட கடும் தீ விபத்தில் மூவர் பலியாகினர்.

TNN 24 Dec 2016, 8:10 am
நியூசிலாந்தில் தமிழ் அகதிகளுக்காக நீண்டகாலமாக பணியாற்றிவரும் வழக்கறிஞர் வீட்டில் ஏற்பட்ட கடும் தீ விபத்தில் மூவர் பலியாகினர்.
Samayam Tamil 3 dead in the fire accident of tamil refugees lawyer home which is in newzealand
தமிழ் அகதிகளுக்கான வழக்கறிஞர் வீட்டில் தீவிபத்து: மூவர் பலி


நியூசிலாந்து அகதிகள் பேரவையின் முதன்மை உறுப்பினரும் அந்நாட்டில் உள்ள தமிழ் அகதிகள் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடியவர் வழக்கறிஞர் கைலேஷ் தனபாலசிங்கம். நியூசிலாந்தின் தெற்கு ஆக்லாண்ட்டில் உள்ள அவரது வீட்டில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் அவரின் மகன்(5), மனைவி (39), மாமியார்(66) உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தனபாலசிங்கம்(49), அவரது மகள்(11) மற்றும் மாமனார்(69) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சதி இருக்க வாய்ப்பில்லை என நியூசிலாந்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

இலங்கையில் பிறந்த தனபாலசிங்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்தில் தஞ்சமடைந்து, அந்நாட்டிலேயே வாழ்ந்து வருகிறார். இலங்கையில் உள்ள இனப்பிரச்னையின் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி நியூசிலாந்தில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகளுக்காக அவர் சட்டரீதியான பல உதவிகளை செய்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

3 dead in the fire accident of Tamil refugees lawyer home which is in NewZealand.

அடுத்த செய்தி