ஆப்நகரம்

சகல நோய்களை குணப்படுத்தும் 344 வயதான ஆமை உயிரிழப்பு

சராசரியாக 100 ஆண்டுகள் மட்டுமே ஆமை இனம் வாழும் என்பதால், அலக்பா ஆமை 344 ஆண்டுகள் வரை வாழ்ந்தது என கூறப்படுவது குறித்து சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 7 Oct 2019, 11:16 am
நைஜீரியா: சகல நோய்களை குணப்படுத்தும் விஷேச ஆற்றல் கொண்ட 344 வயதான ஆமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil alagba tortoise


தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் அலக்பா எனும் பெண் ஆமை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஆமையை பார்த்துக் கொள்வதற்காக மட்டும் அரண்மனை வேலையாட்கள் இரண்டு பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மண உறவைத் தாண்டிய காதல்.! வாலிபருக்கு 5 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்..

ஆப்ரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான இந்த ஆமைக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் விஷேச ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அரண்மனைக்கு வருகை தந்து ஆமையை பார்வையிட்டு செல்வது வழக்கமாக இருந்தது.

திருமண வாழ்வில் 27 ஆண்டுகளை கடந்த ஒபாமா.! உணர்ச்சி பூர்வமான பதிவு..

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அலக்பா எனும் அந்த பெண் ஆமை உயிரிழந்துள்ளது. இந்த தகவலை அரண்மனை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. அதேசமயம், சராசரியாக 100 ஆண்டுகள் மட்டுமே ஆமை இனம் வாழும் என்பதால், அலக்பா ஆமை 344 ஆண்டுகள் வரை வாழ்ந்தது என கூறப்படுவதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக யோமி அக்பாடோ எனும் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி