ஆப்நகரம்

ஆப்கனில் பயணிகள் பேருந்தும், டேங்கர் லாரியும் மோதல்: 36 பேர் பலி

ஆப்கனில் இன்று டேங்கர் லாரியுடன் பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

TNN 4 Sep 2016, 11:50 am
காபூல்: ஆப்கனில் இன்று டேங்கர் லாரியுடன் பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil 36 dead in bus tanker collision in afghanistan
ஆப்கனில் பயணிகள் பேருந்தும், டேங்கர் லாரியும் மோதல்: 36 பேர் பலி


ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் நகரில் இருந்து காபூல் நோக்கி பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாபுல் மாகாணம் அருகே எதிர்திசையில் வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதியது.
#BREAKING Bus, fuel tanker collision kills 35 in Afghanistan's southern province of Zabul: officials— AFP news agency (@AFP) September 4, 2016
இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி